எதிர்பார்த்தபடியே ஏர்டெல் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் அறிமுகமான இரண்டு திட்டங்களுமே ஏர்டெல் நிறுவனத்தின் பழைய திட்டங்கள் ஆகும், அவைகள் ரூ.20 மற்றும் ரூ.50 ஆகும்.
மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மலிவு விலையிலான டால்க்டைம் திட்டங்களானது பிற நெட்வொர்க்குகளுக்கு குரல் அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது,
ஒருவேளை நீங்கள் பிற நெட்வொர்க்குகளுக்கு நிறைய குரல் அழைப்புகளை செய்யும் பழக்கம் கொண்டவராக இருப்பினும் இந்த டால்க்டைம் திட்டங்கள் நிச்சயமாக பயனளிக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, ஏர்டெல் நிறுவனத்தின் இந்த டால்க் டைம் திட்டங்களுடன் ஃபுல் டால்க் டைம் நன்மையானது அனுப்பப்படவில்லை. இந்த அறிமுகத்தினால், இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ஏழு டால்க் டைம் திட்டங்கள் உள்ளன;
அதுவும் ரூ.10 இல் இருந்து தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டை போலவே, பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் இப்போது மொத்தம் ஏழு டால்க் டைம் திட்டங்கள் உள்ளன. அவற்றின் விலை ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.5,000 ஆகும்.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டங்கள் எதுவும் முழு பேச்சு நேரத்தினை அளிக்காது. மாறாக இந்த திட்டங்கள் ஆனது, ரூ.7.47 (ரூ .10), ரூ.14.95 (ரூ.20), ரூ.39.37 (ரூ.50), ரூ.81.75 (ரூ.100), ரூ.423.73 (ரூ.500), ரூ.847.46 (ரூ.1,000) மற்றும் ரூ.4,237.29 (ரூ.5,000) என்கிற பேச்சு நேரங்களை வழங்குகிறது.