சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவை கோயம்பேட்டில் தொடங்கிவைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசு சொகுசுப் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்ககூடாது, இது போன்ற புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்களையும் வெளியிட்டார். தனியார் ஆம்னி பேருந்துகளில் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பண்டிகை காலங்களில் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.